இலங்கை
ரணில் – சஜித்துக்கு இடையில் முக்கிய சந்திப்பு
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான முக்கிய உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடவுள்ளமேலும் படிக்க...
ஆட்கடத்தலை முறியடிக்க அவுஸ்திரேலி யாவிற்கு முழு ஆதரவு : அரசாங்கம் உறுதி
இலங்கையின் கரையோரத்தில் இடம்பெறும் ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோதக் குடியேற்றம் ஆகிய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியாவிற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலியாவின் இறையாண்மை எல்லைகள் செயற்பாட்டின் தளபதி மேஜர் ஜெனரல் கிரேய்க் ப்ஃயூரினி தலைமையிலான தூதுக்குழுவினருடன்மேலும் படிக்க...
ஏகமனதாக கோரினால் மாத்திரமே தேர்தலில் போட்டியிடுவேன் – கரு ஜயசூரிய
நாட்டில் தற்போது இடம்பெறும் அதிகாரப் போராட்டத்தில் அங்கம் வகிக்க விரும்பாத போதிலும், எதிர்கால தலைமுறையினருக்காக அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக சபாநாயகர் கருஜய சூரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு இதற்கு முன்னரும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களால் கோரிக்கைகள்மேலும் படிக்க...
பிரிட்டன் வாழ் புலம் பெயர் இலங்கையர்களுடன் அரசாங்கம் பேச்சு வார்த்தை
இலங்கையில் முதலீடு செய்வது குறித்தும், வர்த்தக வாய்ப்புக்களை அடையாளங்காண்பது தொடர்பிலும் புலம்பெயர்ந்து பிரிட்டனில் வாழும் இலங்கையர்களுடன் அரசாங்கம் முதற்தடவையாகப் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருக்கிறது. முதலீடு மற்றும் வாணிப வாய்ப்புக்கள் தொடர்பில் புலம்பெயர்ந்து பிரிட்டனின் வாழும் இலங்கையர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருக்கிறது. மேலும் படிக்க...
திருக்கோணேஷ்வரரை தரிசித்தார் எஸ்.பி.பி
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திருகோணமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். திருகோணமலைக்கு இன்று (வியாழக்கிழமை) சென்ற அவர், திருக்கோணேஷ்வரம் ஆலயத்திற்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார். அத்தோடு அங்கு பிரசித்துப் பெற்று விளங்கும் இராவணன் கல்வெட்டையும் பார்வையிட்டார். இலங்கைக்கு வருகைத்மேலும் படிக்க...
எனது ஆட்சிக் காலத்திலேயே நீதித்துறை சுயாதீனமாக செயற்படுகிறது – ஜனாதிபதி
நீதித்துறைக்கு அரசியல் அழுத்தங்கள் மற்றும் தலையீடுகளின்றி சுயாதீனமாகவும் பக்க சார்பின்றியும் தீர்ப்புக்களை வழங்கக்கூடிய சுதந்திரமானதொரு சூழல் எனது ஆட்சிக் காலத்திலேயெ காணப்படுகிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது நாட்டின் நீதித்துறைக்கும் நாட்டு மக்களுக்கும் கிடைத்த விசேடமான வரப்பிரசாதமாக கருதுவதாகவும்மேலும் படிக்க...
நல்லாட்சி அரசாங்கத்தின் பிளவே புதிய அரசியலமைப்பு முடங்க காரணம் – சுமந்திரன்
நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்ட பிளவே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முடங்குவதற்கு காரணமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த செவ்வியில், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முடக்கப்பட்டதற்கான காரணம்மேலும் படிக்க...
ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கும் வலிமை முஸ்லிம்களுக்கு உண்டு – ஹிஸ்புல்லா
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். அவ்வாறு மக்கள் வாக்களிக்கும் மூன்று அல்லது நான்கு இலட்ச வாக்குக்கள் பெரும்பான்மைமேலும் படிக்க...
வேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டம்
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். வடக்கு மாகாண சபைக்கு முன்பாக அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாகாண ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள மாகாணமேலும் படிக்க...
சஜித்திற்கு பதவி ஆசை வந்துவிட்டது – சரத் பொன்சேகா
அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு பதவி ஆசை வந்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விமர்சித்தார். கொழும்பில், நேற்று (புதன்கிழமை) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும்மேலும் படிக்க...
தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை வேறொரு இடத்தில் அடக்கம் செய்ய நடவடிக்கை : பொலிஸ் தலைமையகம்
மட்டக்களப்பு- கள்ளியன்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த சீயோன் தேவாலையத்தில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை தாரியின் தலை மற்றும் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பரிவு தெரிவித்தது. இன்று மட்டகளப்பு நீதிவான், சட்டவைத்தியர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினரின் முன்னிலையில்மேலும் படிக்க...
19 ஆவது திருத்தத்தில் பிரதமருக்கே அதிகாரம்: ஜனாதிபதி
ஜனாதிபதி தேர்தலை விட பொதுத்தேர்தல் தொடர்பாகவே தாம் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 19 ஆவது அரசியல் திருத்ததினால் ஜனாதிபதிக்கு அதிகாரம் குறைவாகவே இருக்கும் எனவே ஜனாதிபதி வேட்பாளரை விட பிரதமர் வேட்பாளர் பலம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்மேலும் படிக்க...
“சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரின் தாக்குதல் தொடர்பில் 97 எச்சரிக்கை அறிவித்தல்கள்”
பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட குழுவினர்களின் தாக்குதல்கள் தொடர்பில் 97 எச்சரிக்கை அறிவித்தல்களை தேசிய புலனாய்வு பிரிவினர் கடந்த மூன்று வருடங்களில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டதரணி சஞ்சய ஜயவர்தன உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.மேலும் படிக்க...
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிடும்: மஹிந்த அமரவீர
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தை கைகூடாதென்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்துப் போட்டியிடுமென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
இந்து சமுத்திர மாநாட்டில் பிரதமர் ரணில் சிறப்புரை
மாலைதீவில், இன்று ஆரம்பமாகவுள்ள இந்து சமுத்திர மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறப்புரையொன்றை ஆற்றிவுள்ளார். இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை மாலைதீவு சென்றடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அந்நாட்டில் அமோகமேலும் படிக்க...
சுதந்திரக் கட்சியின் கடந்த கால தீர்மானங்கள் தவறானவை : நிமல் சிறிபால
தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மாமானங்கள் எதிர்பார்ப்பு மிக்கவையாக இருக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பது போன்று கடந்த காலங்களில் நாம் எடுத்த தவறான தீர்மானங்களால் தான் அண்மையில் பல சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. எனவே இனி எடுக்கும் தீர்மானங்கள்மேலும் படிக்க...
ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிபெறச் செய்யவே மூன்றாவது அணி – மஹிந்த
ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப் பெறச்செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளார் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சாடியுள்ளார். பெலவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் மாநாட்டில்மேலும் படிக்க...
மாலைதீவை சென்றடைந்த பிரதமர்
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை மாலைதீவை சென்றடைந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, அந் நாடு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் வேலானா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அரச மரியாதைகளுடன் வரவேற்றார். மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பிற்கு அமைவாகவேமேலும் படிக்க...
ஜனாதிபதியின் தீர்மானங்கள் முரண்பாடாகவே உள்ளன: டிலான் பெரெரா
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழிவிலிருந்து காப்பாற்றும் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டுமானால் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான முகாமுடன் சுதந்திரக் கட்சியை இணைக்கவேண்டும் என்று சுதந்திரக் கட்சியிலிருந்து அண்மையில் விலகி பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...
கெளரவத்தை பாதுகாத்துக் கொண்டு பிரதமர் வீட்டுக்கு செல்ல காலம் வந்துள்ளது – ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கம்
ஐக்கிய தேசிய கட்சி தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலகி இரண்டாம் நிலை தலைவர் ஒருவருக்கு வழங்கவேண்டும். இனி ஒருபோதும் கட்சியை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்கவினால் முடியாது என்பது கடந்த 25வருடங்களில் தேர்தல் தோல்விககளின் மூலம் உணர்ந்துகொள்ளலாம் என ஐக்கியமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 384
- 385
- 386
- 387
- 388
- 389
- 390
- …
- 433
- மேலும் படிக்க
