Main Menu

நல்லாட்சி அரசாங்கத்தின் பிளவே புதிய அரசியலமைப்பு முடங்க காரணம் – சுமந்திரன்

நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்ட பிளவே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முடங்குவதற்கு காரணமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த செவ்வியில், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முடக்கப்பட்டதற்கான காரணம் என்னவென கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

“2015ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூட்டணி தொடக்கத்தில் வலிமையாக இருந்தன.

அதன்பின்னர் நிலைமை மாறிவிட்டது. இரு கட்சிகளுக்கு இடையிலும் கருத்து வேறுபாடு அதிகமானது. முக்கியமாக கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலின்போது 2 கட்சிகளும் பரஸ்பரம் எதிர்க்கட்சிகளாக பார்த்தன.

அதனால், பல ஆண்டுகளாக நீடிக்கும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்துவதில் இருந்து பின்வாங்கத் தொடங்கினர். அதற்கு முக்கிய காரணம் ஜனாதிபதியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே ஆகும். அதனால் மற்ற கட்சிகளிடமும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அவர்களும் பின்வாங்கத் தொடங்கினர்.

அரசியல் தீர்வுக்கான வாய்ப்பாகக் கருதிதான் 2015 தேர்தலில் தேசிய கூட்டணி கட்சிகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தது” என மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...