Main Menu

ஜனாதிபதியின் தீர்மானங்கள் முரண்பாடாகவே உள்ளன: டிலான் பெரெரா

சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியை அழி­வி­லி­ருந்து காப்­பாற்றும் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வர­லாற்றில் இடம்­பி­டிக்க வேண்­டு­மானால் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ரான முகாமுடன் சுதந்­திரக் கட்­சியை இணைக்­க­வேண்டும் என்று சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து அண்­மையில் விலகி பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்­து­கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரெரா தெரி­வித்தார்.  

சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்­சியை மயா­னத்தை நோக்கி கொண்டு செல்­ல­மாட்டார் என்று நம்­பு­கின்றோம் என்றும் டிலான் பெரெரா குறிப்­பிட்டார்.

சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து அண்­மையில் விலகி பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்­து­கொண்ட டிலான் பெரெரா எம்.பி. யிடம் அதற்­கான காரணம் குறித்து வின­வி­ய­போதே அவர் இதனை குறிப்­பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்தல் விடயம் குறித்து சுதந்­திரக் கட்சி சரி­யான முடிவை எடுக்கும் என்று ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திக­தி­வரை காத்­தி­ருந்தோம். காரணம் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ராக சரி­யான வேட்­பா­ளரை கள­மி­றக்­க­வேண்­டிய தேவை காணப்­பட்­டது. ஆனால் சுதந்­திரக் கட்சி இந்த விட­யத்தில் காலத்தை கடத்­திக்­கொண்டு இருந்­ததே தவிர முடி­வெ­டுக்­க­வில்லை.

ஆனால் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திக­தியின் பின்னர் நாங்கள் மெள­ன­மாக இருக்க முடி­யாது. எமது ஆச­னத்தில் மக்கள் எம்­மிடம் கேள்­வி­யெ­ழுப்ப ஆரம்­பித்­து­விட்­டனர். எமது முடிவு என்ன என்­பது குறித்து வினவத் தொடங்­கி­விட்­டனர். எனவே நாங்கள் ஒரு தீர்­மா­னத்தை எடுக்­க­வேண்­டி­யேற்­பட்­டது.

விலகும் நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டது
சுதந்­திரக் கட்­சியை விட்டு வில­குவோம் என்று நாங்கள் நினைக்­க­வில்லை. ஆனால் நாங்கள் அந்த முடிவை எடுப்­ப­தற்­கான நிர்ப்­பந்­தத்தை சுதந்­திரக் கட்­சியில் உள்­ள­வர்கள் ஏற்­ப­டுத்­தி­விட்­டனர். நாட்டு மக்கள் யார் பக்கம் உள்­ளனர் என்­ப­தனை தேடிப்­பார்க்­க­வேண்டும். அதனை கடந்த உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் முடி­வு­களில் நாங்கள் நன்­றா­கவே கண்டோம். எனவே தற்­போது ஒரு தீர்க்­க­மான முடிவை எடுக்­க­வேண்­டி­யுள்­ளது.

ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ரான வேட்­பாளர் அறி­விக்­கப்­பட்­டு­விட்ட நிலையில் நாங்கள் தொடர்ந்தும் முடி­வெ­டுக்­காமல் காத்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாது. அத­னால்தான் கோத்­தாவை ஆத­ரிக்க தீர்­மா­னித்தோம். கடந்த உள்­ளூ­ராட்சி தேர்­தலில் சுதந்­திரக் கட்­சிக்கு 14 இலட்சம் வாக்­குகள் கிடைத்­தன. அதிலும் அதி­க­மான வாக்­குகள் தற்­போது கட்­சி­யினால் இழக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

முரண்­பா­டான தீர்­மா­னங்கள்
எனவே தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விரைந்து ஒரு தீர்­மா­னத்தை எடுக்­க­வேண்­டி­யுள்­ளது. கடந்த காலங்­களில் நாங்கள் அவ­ருடன் இருந்தோம். அவரின் முடி­வு­களை ஆத­ரித்தோம். ஆனால் சில நேரங்­களில் தலை­வரின் முடிவு நெருக்­க­டியை கொடுத்­தது. ஒக்­டோபர் 26 ஆம் திகதி அர­சாங்கம் அமைக்­கப்­பட்­ட­போது நாம் பெரும்­பான்­மையை நிரூ­பிக்க முயற்­சித்தோம். எனினும் அப்­போது திடீ­ரென்று பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டது. அதனால் அந்த முயற்­சியில் எம்மால் வெற்­றி­பெற முடி­ய­வில்லை.

ஐ.தே.க. வுக்கு எதி­ரான முகாம்
இவ்­வாறு பல தீர்­மா­னங்கள் நெருக்­க­டியை கொடுத்­துள்­ளன. எனவே தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விரை­வாக ஒரு தீர்க்­க­மான முடிவை எடுக்­க­வேண்டும். ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ரான முகா­முக்கு தனது ஆத­ரவை வெ ளிப்­ப­டுத்­த­வேண்டும். சுதந்­திரக் கட்சி தற்­போது பல­வீ­ன­ம­டைந்து செல்­கின்­றது. எனவே கட்­சியை காப்­பாற்­ற­வேண்­டிய தேவை உள்­ளது.

சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியை அழி­வி­லி­ருந்து காப்­பாற்றும் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வர­லாற்றில் இடம்­பி­டிக்க வேண்­டு­மானால் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ரான முகா­முடன் சுதந்­திரக் கட்­சியை இணைக்­க­வேண்டும். ஜனா­தி­பதி அந்த முடிவை விரைவில் எடுக்­க­வேண்டும்.

கட்­சியை காப்­பாற்­றுங்கள்

இக்­கட்­டான தற்­போ­தைய சூழலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை மயானத்தை நோக்கி கொண்டு செல்லமாட்டார் என்று நம்புகின்றோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏதோவொரு வகையில் தொடர்ந்து அரசியலில் இருக்கவேண்டும். அவருடைய அரசியல் வகிபாகம் இந்த நாட்டுக்கு தொடர்ந்து தேவைப்படுகின்றது. எனவே அதற்கு ஏற்றவகையிலான தீர்மானத்தை எடுப்பார் என்று நம்புகின்றோம் என்றார்.

பகிரவும்...