Day: August 6, 2019
ஐ.எஸ். தீவிரவாதம் எமது நாட்டில் செயற்படுவதாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை – சாகல

அடிப்படைவாத சம்பவங்கள் தொடர்பில் 5 சம்பவங்கள் பதிவாகியுள்ளன போதும் ஐ.எஸ். தீவிரவாதம் எமது நாட்டில் செயற்படுவதாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் இன்றுமேலும் படிக்க...
சிங்கப்பூரில் திரையிடப்படும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் பிரீமியர் காட்சி

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் பிரீமியர் காட்சி சிங்கப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திரையிடப்படுவது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் பதிவிட்டுள்ளார். வரும் 8ஆம் திகதி படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இத்திரைப்படத்துக்கான முன்பதிவு தொடங்கி பல அரங்குகளில் முதல் நாளுக்கான அனைத்துமேலும் படிக்க...
விமான இரைச்சலால் பாதிக்கப்படும் நகர மக்களுக்கு விரைவில் தீர்வு!

பிரான்சில் ஓர்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து வௌியேறும் விமானங்களால் தங்களின் உறக்கம் பாதிக்கப்படுவதாக செய்ன்ட் மவுர் நகர மக்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். கடந்த ஜுலை மாதத்தில் இருந்து ஓர்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள், Saint-Maur (Val-de-Marne) நகருக்கு மேலாகமேலும் படிக்க...
பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து – 14 மருத்துவர்கள் உயிரிழப்பு!

பொலிவியா நாட்டில் மருத்துவர்கள் பயணித்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். பொலிவியாவின் அப்போலோ பகுதியில் ஒரு பேருந்து மருத்துவர்கள் பலருடன் பயணித்துக் கொண்டிருந்தது. லா பாஸ் பகுதியில் செல்லும்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலுள்ளமேலும் படிக்க...
மாலைத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதிக்கு 15 நாள் சிறைக்காவல்!

இந்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட மாலைத்தீவின் முன்னாள் துணை ஜனாதிபதி அகமது அதீபை 15 நாட்கள் சிறையில் தடுத்து வைக்குமாறு அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மாலைத்தீவின் ஜனாதிபதி யாமீன் அப்துல் கய்யூமை கொலை செய்வதற்கு சதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள்மேலும் படிக்க...
காஷ்மீரில் மெஹபூபா, உமர் அப்துல்லா உள்பட பல தலைவர்கள் கைது

காஷ்மீரில் முன்னாள் முதலமைச்சர்களான மெஹபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்தும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகமேலும் படிக்க...
சுஷ்மா சுவராஜ் மறைந்தார்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். பாஜகவை சேர்ந்த சுஷ்மா சுவராஜ் கடந்த பாஜக ஆட்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். வெளியுறவுத்துறையில் சிறப்பாக பணியாற்றியமேலும் படிக்க...
சஹ்ரன் குழுவால் தென்னிந்தியாவுக்கும் ஆபத்து – தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர்

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற நிலையில் அதில் இருந்து அரசாங்கம் தப்பிக்க முடியாது. அரசாங்கம் இதில் பொறுப்பேற்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கைமேலும் படிக்க...
தேர்தல் சட்டத்திலுள்ள குறைபாடுகள் சிறந்த சமூகத்தை கட்டி எழுப்புவதற்கு தடையை ஏற்படுத்துகின்றன ; ஜனாதிபதி
நாட்டின் சட்டக் கட்டமைப்பும் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தில் உள்ள சில குறைபாடுகளினதும் காரணமாக சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தடைகள் உருவாவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சிறந்த அரசியல் கலாசாரமொன்றிற்காக முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகள் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித்மேலும் படிக்க...
நிலத்தை துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்துங்கள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பூமியில் பெரும்பாலும் மனிதனுக்கு வாழ்வளிக்கக் கூடிய நிலப்பகுதிகளை துஸ்பிரயோகம் செய்வதை நிறுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மனிதனின் பலவிதமான செயற்பாடுகளினால் நாளாந்தம் வளமான நிலப்பகுதிகள் பாதிப்படைவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான மனித நடவடிக்கைகள் மண்ணின் சீரழிவு, விரிவாக்கப்பட்ட பாலைவனங்கள்,மேலும் படிக்க...
இங்கிலாந்துடனான பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை : ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள்

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் தெரேசா மேயின், வௌியேறும் ஒப்பந்தத்தில் மாற்றங்களை மேற்கொள்ள இங்கிலாந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், தொடர்ந்து பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தையாளர்கள், புதிய இங்கிலாந்து அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டமேலும் படிக்க...
இறையடி எய்தினார் தி.மு.க முன்னாள் உறுப்பினர் உசேன்!

தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஆயிரம் விளக்கு உசேன் வயது முதிர்ச்சி காரணமாக காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை காலமானார். அவரின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,மேலும் படிக்க...
அயோத்தி விவகாரம்: தொடர் விசாரணைகளை ஆரம்பித்தது உயர்நீதிமன்றம்!

சர்ச்சைக்குரிய அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி கட்ட விசாரணை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த விசாரணையை முன்னெடுக்கவுள்ளது. அத்துடன், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எதிர்வரும் நவம்பரில் ஓய்வு பெறமேலும் படிக்க...
காஷ்மீரைப்போல் தமிழ்நாடும் இரண்டாக பிரிக்கப்படுமா?:- சிதம்பரம் கேள்வி!

எதிர்காலத்தில் தமிழ்நாட்டையும் மத்திய அரசு இரண்டாக பிரித்தால் எப்படி தடுக்க முடியும்? என மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். இது குறித்துமேலும் படிக்க...
மக்களுக்காக என்னை அர்ப்பணிப்பதே எனது நோக்கம்: சஜித்

மக்களுக்காக என்னை அர்ப்பணிப்பதே எனது நோக்கம். தேசிய பாதுகாப்பு, சிறந்த முற்போக்கு, ஐக்கிய இலங்கை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு எனது சேவைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஓட்டமாவடியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சஜித்மேலும் படிக்க...
நியூசிலாந்தில் கருக்கலைப்பு சட்ட பூர்வமாக்கும் மசோதா

நியூசிலாந்தில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்கின்ற நிலையில் கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு உடல் ரீதியிலோ அல்லது மன ரீதியிலோ ஆபத்து இருக்கும் பட்சத்தில் மருத்துவர்கள் அனுமதிமேலும் படிக்க...
ஹொங்கொங் போராட்டத்தால் 230 விமானங்கள் ரத்து

ஹொங்கொங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்ற போராட்டத்தால் விமான சேவை முடங்கியதுடன் 230 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹொங்கொங்கில் குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் அரசின் சட்ட திருத்தத்துக்கெதிராக கடந்த ஜூன் மாதம் முதல் கடுமையான போராட்டங்கள் இடம்டபெற்று வருகின்றது. மக்களின் தொடர்மேலும் படிக்க...
மைத்திரி மகிந்த சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இந்த சந்திப்புப்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் காலமான குருணாகல் மாவட்டமேலும் படிக்க...
அமெரிக்காவின் பயண எச்சரிக்கை தவறாக பரப்புரை செய்யப் படுவதாக குற்றச்சாட்டு !

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட பயண எச்சரிக்கையை தவறாகப் புரிந்துகொண்டு, சில ஊடக நிறுவனங்களும், தனிநபர்களும் மற்றொரு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கத்தின் தேசிய ஊடக மையம் தெரிவித்துள்ளது. மற்றொரு பயங்கரவாத தாக்குதல் குறித்த வதந்தி முற்றிலும்மேலும் படிக்க...
நல்லூர் கந்தன் ஆலய கொடியேற்றம் இன்று

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகும். எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் தீர்த்தத் திருவிழாவும்மேலும் படிக்க...