Main Menu

சஹ்ரன் குழுவால் தென்னிந்தியாவுக்கும் ஆபத்து – தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர்

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற நிலையில் அதில் இருந்து அரசாங்கம் தப்பிக்க முடியாது. அரசாங்கம் இதில் பொறுப்பேற்க  வேண்டும் என்பது எனது நிலைப்பாடு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்தார். 

ஈஸ்டர்  தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாட்சியமளிக்கையில் இவற்றை கூறினார். 

இந்த சூழ்ச்சியில் தொடர்புபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேரடி தொடர்பில் மட்டும் அல்ல என்ன வகையிலேனும் தொடர்பு பட்ட நபர்கள் என்றால் அவர்களை கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என கோரியுள்ளோம். 

ஒரு குழு அழிக்கப்பட்ட காரணத்தினால் பிரச்சினை முடிந்ததாக கூற முடியாது. இது புற்றுநோய் போன்றது. ஒரு குழு முடிந்துவிட்டது என திருப்திகொள்ள முடியாது. வேறு யார் உள்ளனர் என்பதை கண்டறிய வேண்டும். யாரின் கொள்கை உருவாகின்றது. ஆயுதம் என்பது துப்பாக்கி மட்டும் அல்ல வேறு எதனையும் பயன்படுத்த முடியும். புதிய பயங்கரவாத யுகத்தில் உள்ளதாக் அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும். தனி நபரால் கூட முடியும். இது புற்றுநோய் போன்றது ஆகவே இதில் நாம் அவதானமாக இல்லாத நிலையில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.  

இன்று நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் சீராக உள்ளது. சோல்பரி அரசியல் அமைப்பில் இருந்தே அமைதியையும் நல்லாட்சியையும் வலியுறுத்தியுள்ளனர். பின்னர் நாம் அதனை நீக்கிவிட்டோம். ஆனால் முதலில் அமைதியான சூழலும் நல்லாட்சியும் தான் வேண்டும். இது புற்றுநோய் ஆகவே இது முடிவுக்கு வராத வகையில் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். சஹ்ரன் தமிழில் பிரசாரம் செய்வதால் இலங்கைக்கு மட்டும் அல்ல தென்னிந்தியாவிற்கும் பாரிய அச்சுறுத்தல். ஆகவே தான் அவர்கள் அக்கறை செலுத்துகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பகிரவும்...