Main Menu

நிலத்தை துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்துங்கள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பூமியில் பெரும்பாலும் மனிதனுக்கு வாழ்வளிக்கக் கூடிய நிலப்பகுதிகளை துஸ்பிரயோகம் செய்வதை நிறுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மனிதனின் பலவிதமான செயற்பாடுகளினால் நாளாந்தம் வளமான நிலப்பகுதிகள் பாதிப்படைவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான மனித நடவடிக்கைகள் மண்ணின் சீரழிவு, விரிவாக்கப்பட்ட பாலைவனங்கள், காடுகளை அழித்தல், வனவிலங்குகளை விரட்டுதல் மற்றும் வடிகட்டப்பட்ட நிலத்தடி நீர் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு வழிவகுத்துள்ளன.

இந்த செயல்பாட்டினால் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் ஒரு வளமாக இருந்த நிலமானது, கார்பனின் முக்கிய ஆதாரமாக மாற்றப்பட்டுள்ளது.

பேரழிவு தரும் காலநிலை மாற்றம், வெப்பநிலை அதிகரிப்பை தவிர்க்க நில துஷ்பிரயோகம் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சுவிட்சர்லாந்து, ஜெனீவாவில் இடம்பெற்ற சூழலியல் விஞ்ஞானிகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்புகளில் இந்த விடயம் பற்றி கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பகிரவும்...