Main Menu

இங்கிலாந்துடனான பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை : ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள்

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் தெரேசா மேயின், வௌியேறும் ஒப்பந்தத்தில் மாற்றங்களை மேற்கொள்ள இங்கிலாந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், தொடர்ந்து பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தையாளர்கள், புதிய இங்கிலாந்து அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள், அதாவது ஐரிஷ் எல்லையை பின்னுக்குத் தள்ளுவது போன்றவை ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று ஐரோப்பிய இராஜதந்திரிகளிடம் கூறியுள்ளனர்.

ஆனால் ஒரு ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட்டை அனுமதிக்க பேச்சுவார்த்தைகள் தோல்வியடைய வேண்டும் என்று விரும்பியதாக கூறுப்படும் குற்றச்சாட்டுகளை டவுனிங் ஸ்ட்ரீட் நிராகரித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் அதன் மாற்றங்களை மறுப்பதை மறுபரிசீலனை செய்யும் என்று அவர்கள் நம்புவதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் தெரேசா மே-யின் ஒப்பந்தம் அதன் தற்போதைய வடிவத்தில் நாடாளுமன்றம் ஊடாக வெற்றி பெறாது என்பதால், ஐரோப்பிய ஒன்றியம் “தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

அவர்கள் மேலும் கூறியதாவது: “நாங்கள் மிகப்பெரிய ஆற்றலுடனும் நட்பின் மனப்பான்மையுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோம், மேலும் வௌியேறும் ஒப்பந்தத்தில் எந்த மாற்றங்களையும் செய்ய ஐரோப்பிய ஒன்றியம் அதன் தற்போதைய மறுப்பை மறுபரிசீலனை செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் முன்னாள் பிரதமர் தெரேசா மே-க்கும் இடையில் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட்ட திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மூன்று முறை தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...