Main Menu

ஹொங்கொங் போராட்டத்தால் 230 விமானங்கள் ரத்து

ஹொங்கொங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்ற போராட்டத்தால் விமான சேவை முடங்கியதுடன் 230 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹொங்கொங்கில் குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் அரசின் சட்ட திருத்தத்துக்கெதிராக கடந்த ஜூன் மாதம் முதல் கடுமையான போராட்டங்கள் இடம்டபெற்று வருகின்றது.

மக்களின் தொடர் போராட்டம் காரணமாக கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா நிறுத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்த போதும் மசோதாவை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வார இறுதி நாட்களில் மட்டும் நடந்து வந்த போராட்டங்கள் தற்போது வார நாட்களிலும் நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று அதிகாலை முதலே மக்கள் வீதிகளில் பேரணியாக சென்றும், வீதிகளை முற்றுகையிட்டும் புகையிரதங்களை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் விமான நிலையங்களுக்கு செல்லும் முக்கிய வீதிகளையும் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்ததனால் விமான நிலையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டு விமான சேவை முடங்கியதுடன் 230 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

நேற்றைய போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்உட்பட பல தரப்பினர் இணைந்து சுமார் 5 லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

பகிரவும்...