Main Menu

புவி வெப்பம அடைந்ததால் அழிந்த பிசோல் பனிப்பாறைக்கு இறுதிச் சடங்கு நடத்திய சுவிஸ் மக்கள்!

புவி வெப்பமடைவதன் விளைவாக அழிவடைந்துள்ள பிசோல் பனிப்பாறைக்கு, சுவிஸ் மக்கள் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் ஒரு நினைவு கூரல் பிராத்தனை பேரணி​யை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பிசோல் பனிப்பாறைக்கு இறுதிச் சடங்கை நடத்தும் விதமாக நூற்றுக்கணக்கான மக்கள் இணைந்து நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இறுதி ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

வடகிழக்கு சுவிட்சர்லாந்தின் கிளாரஸ் ஆல்ப்ஸில் உள்ள குறித்த பனிப்பாறை, அசல் அளவில் இருந்து ஒரு சிறிய பகுதியாக சுருங்கியுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அந்த பனிப்பாறை சுமார் 80 சதவீதம் உருகியுள்ளதாக விஞ்ஞானிகள் கணிப்பிட்டுள்ளனர்.

அதிகரித்து வரும் புவி வெப்பநிலையால் அதன் போக்கு துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையில் உலகத் தலைவர் காலநிலை மாற்றம் தொடர்பாக கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் சுவிஸ்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் ஒன்றிணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

16 வயதான சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க்கின் செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்ட மில்லியன் கணக்கான இளம் தலைமுறையினர், கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் இளைஞர் மாநாட்டின் பின்னர் உலகளாவிய ரீதியாக காலநிலை மாற்றத்திற்கு எதிராக தமது அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிரவும்...