Main Menu

செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய சுவிஸில் வாக்கெடுப்பு !

செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான வாக்கெடுப்பை நடத்த சுவிஸர்லாந்து தீர்மானித்துள்ளது.

அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் செயற்கை பூச்சிக்கொல்லிகளை தடைசெய்யும் உலகின் இரண்டாவது நாடாக சுவிஸர்லாந்து விளங்கும்.

விவசாய வளம் நிறைந்த ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான சுவிஸர்லாந்தில் செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் முழுவதுமாக தடை செய்ய்யப்படவுள்ளது.

இத் தடைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தண்ணீரில் பூச்சிக்கொல்லிகளின் அளவு மற்றும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சிகளுக்கு சேதம் ஏற்படுவதை சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால் இதுபோன்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு மானியங்கள் நிறுத்தப்படும் எனவும்  10 ஆண்டுகளுக்குள் அவற்றை முற்றிலும் தடை செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த திட்டங்கள் மருந்துகள் சார்ந்த பலரது வணிகங்கள் பாதிக்கப்படும் என்றும் சுவிஸ் விவசாயிகள் எச்சரிக்கின்றனர்.

இதேவேளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் வாக்கெடுப்பில், பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், புதைபடிவ எரிபொருட்களுக்கான புதிய வரி மற்றும் அவசர கொரோனா நிதி போன்ற பிற திட்டம் மீதான வகிரக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.

ஜனநாயக ஆட்சிமுறை என்பதால் ஆல்பைன் தேசத்தின் அனைத்து முக்கிய முடிவுகளும் வாக்கெடுப்பின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன.

மேலும் நாடு தழுவிய வாக்குகளை உறுதி செய்வதற்காக பிரச்சாரக்காரர்கள் 100,000 கையொப்பங்களை சேகரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிரவும்...