Main Menu

பெலாரஸ் ஜனாதிபதியின் நிதிச் சொத்துக்களை சுவிஸ்லாந்து முடக்கியது!

கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் நிதிச் சொத்துக்களை சுவிஸ்லாந்து முடக்கியுள்ளது.

சுவிஸ்லாந்து வழியாக செல்லவோ அல்லது பயணிக்கவோ தடை விதிக்கப்பட்ட 15 பேரில் லுகாஷென்கோ மற்றும் மகன் விக்டர் ஆகியோர் அடங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வன்முறை மற்றும் தன்னிச்சையான கைதுகளின் பயன்பாட்டிற்கு தனிநபர்கள் பொறுப்பு என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுவிஸ்லாந்து தற்போதைய பதற்றங்களால் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது மற்றும் பெலாரஸ் அரசாங்கத்திற்கும் சிவில் சமூகத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்கவும், பாதுகாப்புப் படையினரால் சித்திரவதை மற்றும் மோசமான நடத்தை குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் அது கோரியது.

தேர்தல்களுக்குப் பின்னர் வன்முறையைத் தொடர்ந்து கடும் எதிர்ப்பினை எதிர்கொண்டுள்ள அலெக்சாண்டர் லுகாஷென்கோ, எதிர்காலத்திலும் கடும் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பகிரவும்...