Main Menu

உலகின் சிறந்த நாடுகளின் பட்டியல் – சுவிட்சர்லாந்து முதலிடம்

உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது. யுஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் இதழ் 2024-ம்ஆண்டுக்கான உலகின் சிறந்தநாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்தப் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இம்முறையும் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது. 2-வதுஇடத்தில் ஜப்பான், 3-வது இடத்தில்அமெரிக்கா, 4-வது இடத்தில் கனடா, 5-வது இடத்தில் ஆஸ்திரேலியா ஆகியவை உள்ளன.

வாழ்க்கைத் தரம், தொழில்முனைவு, சாகசம், சுறுசுறுப்பு, பாரம்பரியம், கலாச்சார நோக்கம் உட்பட 10 தன்மைகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.89 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் இந்தியா 33-வது இடத்தில் உள்ளது. சென்ற ஆண்டு பட்டியலில் இந்தியா 30-வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது 3 இடங்கள் பின்னகர்ந்துள்ளது.
இந்தப் பட்டியலில் முதல் 25 இடங்களில் ஐரோப்பிய நாடுகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஆசியாவிலிருந்து ஜப்பான், சிங்கப்பூர், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளே முதல் 25 இடங்களில் உள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் 17-வது இடத்திலும் கத்தார் 25-வது இடத்திலும் உள்ளன.