Main Menu

கொவிட்-19 அபாய நாடுகளின் பட்டியலில் மேலும் 15 நாடுகளை சேர்த்தது சுவிஸ்லாந்து!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் மெக்ஸிகோ மற்றும் லக்சம்பர்க் உட்பட மேலும் 15 நாடுகளை சுவிஸ்லாந்து சேர்த்துள்ளது.

இதற்மைய குறித்த நாடுகள் சுவிஸ்லாந்துக்குள் நுழையும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தொற்று நிலைகளின் அடிப்படையில், அபாயத்தை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் தற்போது 42 நாடுகள் உள்ளன.

இவ்வாறு சுவிஸ்லாந்து வரும் பயணிகள் உடனடியாகவும் நேரடியாகவும் 10 நாட்களுக்கு வீட்டிற்கு அல்லது பிற பொருத்தமான தங்குமிடங்களுக்கு செல்ல வேண்டும். மேலும், மண்டலம் அல்லது பிராந்திய அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும்.

எந்தவொரு அறிகுறிகளும் காட்டப்படாத பின்னரே பயணிகள் வெளியிடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

சில சந்தர்ப்பங்களில், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் பிற உதவிகளை மண்டல அதிகாரிகள் வழங்குகிறார்கள். ஆனால் வருமான இழப்புக்கு எந்த ஆதரவும் வழங்கப்படவில்லை.

இன்று (வியாழக்கிழமை) முதல் கோஸ்டாரிகா, கஸகஸ்தான், மாண்டினீக்ரோ, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்கள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள், ஏற்கனவே பட்டியலில் உள்ள பிரேஸில், இஸ்ரேல், ரஷ்யா, சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பட்டியலில் இணைகின்றன.

பகிரவும்...