Main Menu

பிரான்ஸில் கொரோனாவால் 60 வயதிற்கு உட்பட்டவர்களே அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளனர்!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில், 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் 60 வயதிற்குட்பட்டவர்கள் என நாட்டின் தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவர் ஜெரோம் சாலமன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற விஷேட செய்தி மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தீவிர சிகிச்சையில் உள்ள 300 கொரோனா வைரஸ் நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 60 வயதிற்குட்பட்டவர்கள்.

பெரியவர்களிடையே கடுமையாக பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனர். மேலும் தீவிர சிகிச்சையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் 60 வயதிற்குட்பட்டவர்கள் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்’ என கூறினார்.

எனினும், தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவர் சாலமன் 60 வயதிற்குட்பட்டவர்களின் வயது வரம்பைக் குறிப்பிடவில்லை.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, நாட்டில் 5,423பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 127பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...