Main Menu

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஒன்றரை வருடங்கள் ஆகும்?

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஒன்றரை வருடங்கள் ஆகும் என அமெரிக்க பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை இன்று (திங்கள் கிழமை) அமெரிக்கா பரிசோதித்து பார்க்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய சுகாதார நிறுவவனத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள இந்த சோதனை, சியாட்டில் உள்ள கைசர் பெர்மனண்டே வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,400ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி, 153,000இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகிரவும்...