Main Menu

பதவிக்காலத்துக்கு பின்னரும் புட்டினை பாதுகாக்கும் சட்ட வரைபு சமர்ப்பிப்பு

ரஷ்யாவின் ஜனாதிபதிகள் தமது பதவிக் காலத்துக்கு பின்னரும் தமக்கெதிரான வழக்குகளில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு ஏதுவான சட்டவரைபு அந்நாட்டின் சட்டவாக்க பிரதிநிதிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வரைபானது, ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதி விளார்டிமிர் புட்டின் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்தபின்னர், அவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கிரிமினல் சட்ட நகர்வுகளில் இருந்து அவரை பாதுகாக்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தற்போதைய சட்ட நடைமுறைகளின் பிரகாரம், அந்நாட்டின் ஜனாதிபதியை அவரது பதவிக்காலத்தில், எவ்விதமான கிருமினல் சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்படுத்த முடியாது.

இந்நிலையில் தற்போது கொண்டுவரப்படவுள்ள குறித்த சட்டமானது பதவிக்காலத்துக்கு பின்னரும் அவரது அதிகாரத்தை நீடிப்பதற்கான முன்னெடுப்பாக அமைகிறது.

குறித்த சட்டவரைபானது, இவ்வருட ஆரம்பத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிர்மிர் புட்டினால் ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தினை ஆதரித்த பாராளுமன்ற உறுப்பினர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...