Main Menu

போர்க் குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள கொசாவோ ஜனாதிபதி நெதர்லாந்துக்கு அழைத்து வரப்பட்டார்!

போர்க் குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள கொசாவோ ஜனாதிபதி ஹஷீம் தாச்சி, வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

1998-98 ஆண்டுகளில் செர்பியாவிடமிருந்து விடுதலை பெறுவதற்காக நடைபெற்ற போரில், அப்போது படைப் பிரிவு தளபதியாக இருந்த ஹஷீம் தாச்சி போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக அவரும், கொசாவோ விடுதலைப் படையின் மேலும் இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு தி ஹேக் நகருக்கு விமானம் மூலம் வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டனர்.

முன்னதாகவே போர்க் குற்ற விசாரணையில் பங்கேற்பதற்காக தனது பதவியை இராஜிநாமா செய்த 52 வயதான தாச்சி, ‘கொசோவோவின் ஜனாதிபதி பதவியின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக’ தனது பதவியைத் துறக்க முடிவு செய்ததாக தெரிவித்தார்.

தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கொசாவோ, செர்பியாவிடம் இருந்து பெப்ரவரி 17ஆம் திகதி 2008ஆம் ஆண்டு ஒருதலைப் பட்சமாக விடுதலையை அறிவித்த நாடாகும்.

இது தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது. 1999ஆம் ஆண்டு முதல் இது ஐக்கிய நாடுகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிவருகின்றது.

பகிரவும்...