எங்கள் நாடு ஒன்றும் விற்பனைக்கு அல்ல – கிறீன்லாந்து மக்கள்
“நாங்கள் கொள்கை ரீதியாக எந்த முடிவும் எடுக்கவில்லை, ஆனால் நான் இந்த நிகழ்வில் பங்கேற்க மாட்டேன்” என்று கிறீன்லாந்து பிரதமர் உள்ளூர் நாளிதழான Sermitsiaq இற்குத் தெரிவித்துள்ளார்.
புதிய தூதரகத்திற்கு வெளியே திரண்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், கிறீன்லாந்தின் சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கொடிகளை ஏந்தியவாறு, “அமெரிக்காவே, இதை நிறுத்து”, “இல்லை என்றால் இல்லை தான்” மற்றும் “கிறீன்லாந்து கிறீன்லாந்து மக்களுக்கே சொந்தம்” என்று முழக்கங்களை எழுப்பினர்.
முன்னதாக, கிறீன்லாந்தை எவ்வாறாவது கைப்பற்றுவது என்றும், தேவைப்பட்டால் அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்துவது குறித்தும் டிரம்ப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை கடந்த ஜனவரியில் தெரிவித்திருந்தது.
இது ஐரோப்பாவில் உள்ள நேட்டோ (NATO) நட்பு நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்காவின் இந்த இணைப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கிறீன்லாந்து அரசாங்கம், “இந்த பிரம்மாண்டமான தீவு எமது மக்களுக்கு மட்டுமே சொந்தமானது, இது ஒருபோதும் விற்பனைக்கு அல்ல” என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
