Main Menu

நோர்வே பாராளுமன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல்கள் மீது சைபர் தாக்குதல்

நோர்வேயினுடைய பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுடைய பிரத்தியேக மின்னஞ்சல் கணக்குகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டின் கருவூல இயக்குனர் மரைன் அண்டெர்சன் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், தற்போது நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயத்தை தாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துள்ளதாக திருவாட்டி அண்டெர்சன் குறிப்பிட்டுள்ளார். சைபர் தாக்குதல் தொடர்பிலான விபரங்களை முழுமையாகத் திரட்டி, ஏற்பட்ட சேதாரங்கள் குறித்தும் மதிப்பிடப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மேர்கல் உள்ளிட்ட பல ஜேர்மனி அரசியல்வாதிகளுடைய மின்னஞ்சல்கள் ஊடுருவப்பட்டு, அவர்களுடைய தகவல்கள் இணையங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தன.

அதேபோன்று, கடந்த வருடம் அவுஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர்களுடைய மின்னஞ்சல்களும் ஊடுருவ முயற்சிக்கப்பட்டதாகவும், இதனை சீனா ஹக்கர்கள் முயற்சித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், சீனா இக்குற்றச்சாட்டை மறுத்திருந்தது.

இந்நிலையில், நோர்வோ பாராளுமன்ற உறுப்பினர்களின் கணக்குகள் ஊடுருவப்பட்ட சம்பவமான மிகத்தீவிரமாக அணுகப்படுவதாக நோர்வே தேசிய பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

பகிரவும்...