Main Menu

இங்கிலாந்தில் பாடசாலைகள்- கல்லூரிகள் மீண்டும் ஆரம்பம்!

இங்கிலாந்தில் பல மாதங்களுக்கு பிறகு பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிவது கட்டாயம் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் முதற் கட்டமாக 40 சதவீத பாடசாலைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் எனறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பாடசாலைகள், கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

எனினும், இங்கிலாந்தில் மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு அனுப்ப சில பெற்றோர்கள் அச்சமடைவதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று மற்றவர்களுக்கு பரவுவது அல்லது அதிலிருந்து தீவிரமாக நோய்வாய்ப்படுவது சாத்தியமில்லை என்று அரசாங்கம் கூறியுள்ளது.

கடந்த கல்வியாண்டின் முடிவில் மாணவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே, பாடசாலைகளுக்கு மீள சென்றுக்கொண்டிருந்த நிலையில், தற்போது 25,000 பாடசாலைகளுக்கு மாணவர்கள், முழுநேரத்திற்குத் திரும்பியுள்ளனர்.

புதிய அரசாங்க வழிகாட்டுதல்களின்படி, ஒரு தொற்று உறுதிசெய்யப்பட்டால், அந்த வகுப்பறையில் உள்ள முழு மாணவர்களும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...