Day: June 26, 2021
சீனாவில் தற்காப்பு கலைகள் கற்று தரும் பள்ளியில் தீவிபத்து- 18 சிறுவர்கள் உடல் கருகி பலி
சீனாவில் 7 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 34 பேர் பள்ளிக்கூட வளாகத்திலேயே தங்கியிருந்து தற்காப்பு கலைகளை கற்று வந்தனர். சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனன் மாகாணத்தின் ஷுவாங்கியு நகரில் ‘மார்ஷியல் ஆர்ட்ஸ்’ எனப்படும் தற்காப்பு கலைகளை கற்றுமேலும் படிக்க...
இந்தோனேசியாவில் சினோவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவர்களுக்கு கொரோனா
இந்தோனேசியாவில் கடந்த 2 வார காலத்தில் மட்டும் 358- மருத்துவர்கள் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் சினோவேக் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் போட்டுக்கொண்டவர்கள். இந்தனோசியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அந்நாட்டில் 20 ஆயிரம் பேருக்கு தொற்றுமேலும் படிக்க...
ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டை கொலை செய்த குற்றத்திற்காக பொலிஸ் அதிகாரி டெரெக்கு 22.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
கறுப்பின அமெரிக்கரான ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டை கொலை செய்த குற்றத்திற்காக, பொலிஸ் அதிகாரி டெரெக் சாவினுக்கு 22 வருடங்கள் மற்றும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம், இனவெறி மற்றும் பொலிஸாரின் அடக்குமுறைக்குமேலும் படிக்க...
ஜேர்மனியில் கத்திக் குத்து: மூன்று பேர் உயிரிழப்பு- ஐந்து பேர் படுகாயம்!
தெற்கு ஜேர்மனியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில், மூன்று பேர் உயிரிழந்ததோடு ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். பிராங்பேர்ட்டின் தென்கிழக்கே உள்ள வூஸ்பேர்க் நகரின் வீதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்,மேலும் படிக்க...
சபரிமலை ஐயப்பன் ஆலய பூஜைகளில் பங்கேற்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி
சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் இடம்பெறவுள்ள ஆடி மாத பூஜையில் பங்கேற்பதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இணையத்தின் ஊடான முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள்மேலும் படிக்க...
மத்திய அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்றுத் திரட்டும் அழகிரி
மத்திய அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க முன்வரவேண்டுமென தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அனைத்து கட்சிகளுக்கும் இந்த அழைப்பினை விடுத்துள்ளார். குறித்த ஊடக அறிக்கையில் கே.எஸ்.அழகிரிமேலும் படிக்க...
அடிமட்ட வாக்காளர்களுடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு !
வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தல் மற்றும் பிற தேர்தல்களை இலக்காகக் கொண்டு கட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. பல சமீபத்திய மாற்றங்கள் காரணமாக, கட்சியிலிருந்து தங்களைத் தூர விலக்கிக் கொண்ட பலர் மீண்டும் வந்து கட்சியைமேலும் படிக்க...
மரண தண்டனைக் கைதியை அரசு விடுவித்துள்ளமை தொடர்பாக சிறிதரன் கருத்து
அரசியல் கைதிகள் 16 பேரின் விடுதலை என்பது இந்த அரசின் மரணதண்டனைக் கைதி ஒருவரை விடுதலை செய்யும் வகையில் முலாம் பூசப்பட்ட விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துமேலும் படிக்க...
ஜனாதிபதியின் நாட்டுக்கான உரை தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி விசனம்!
நாட்டு மக்களுக்கான ஜனாதிபதியின் உரை தொடர்பாக விமர்சிக்க ஐக்கிய மக்கள் சக்தி இன்று (சனிக்கிழமை) விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் எதிர்பார்த்த விதமாக ஜனாதிபதியின் உரை அமையவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமமேலும் படிக்க...