Main Menu

சூடான் அகதிக்கு புகலிடம் வழங்கியது சுவிஸ்!

மனுஸ் தீவிலுள்ள அவுஸ்ரேலிய தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த சூடான் அகதிக்கு சுவிஸ் அரசாங்கம் புகலிடம் வழங்கியுள்ளது.

அப்துல் அசிஸ் முகமது என்ற 25 வயதான சூடான் அகதிக்கே சுவிஸ் அரசாங்கம் இவ்வாறு புகலிடம் வழங்கியுள்ளது.

குறித்த சூடான் அகதி, அவுஸ்ரேலிய தடுப்பு முகாம் நிலையை ஆவணப்படுத்தியதற்காக மார்ட்டின் என்னல்ஸ் என்ற மனித உரிமை விருதை வென்றிருந்தார்.

முன்னதாக, 2017ல் அவுஸ்ரேலிய கார்ட்டியன் ஊடகமும் வீலர் மையமும் இணைந்த தயாரித்த ஒலித்தொடருக்காக 4,000 குரல் பதிவுகளை அவர் அனுப்பி வைத்திருந்தார்.

கடந்த மார்ச் மாதம், ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் உரையாற்றிய அப்துல் அசிஸ், அவுஸ்ரேலிய கடல் கடந்த தடுப்பு கொள்கை அகதிகளுக்கு ஏற்படுத்தும் மோசமான சூழலை விளக்கியிருந்தார்.

இந்தநிலையில் தற்போது சுவிஸில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அப்துல் அசிஸ், ‘சுவிஸ் என்ற அழகிய நாட்டில் எனக்கு தஞ்சமளிக்கப்பட்டிருக்கின்றது.

ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக சுதந்திரமாக இருக்கிறேன், ஆனால் மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள எனது சகோதர சகோதரிகள் பாதுகாப்பான நாட்டில் அடைக்கலம் பெறும் வரை மனதளவில் என்னால் சுதந்திரமடைய இயலாது,’ எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...