Main Menu

பெர்லினில் வீட்டு வாடகையில் மாற்றம் செய்யக்கூடாது – புதிய சட்டத்தைக் கொண்டுவர செனட் முடிவு

பெர்லினில் வீட்டு வாடகை ராக்கெட் போல் ஏறிக்கொண்டே செல்வதையடுத்து ஐந்து, ஆண்டுகளுக்கு வாடகையில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்னும் சட்டத்தைக் கொண்டுவர செனட் முடிவு செய்துள்ளது.

இந்த திட்டம் 2020இலிருந்து அமுலுக்கு வரலாம் எனத் தெரிகிறது.

ஜூன் 18 அன்று செனட் முன் வைக்கப்பட உள்ள இந்த திட்டத்தின்படி, வீட்டு உரிமையாளரும் வாடகைக்கு இருப்பவரும் கடைசியாக ஒப்புக்கொண்ட வாடகை தொகையே ஐந்து ஆண்டுகளுக்கு வாடகையாக நீடிக்கும்.

மேலும், புதிதாக ஒரு வீட்டுக்கு குடி வருபவர்கள், இதற்கு முன் அந்த வீட்டிலிருந்தவர்கள் கொடுத்த அதே வாடகையையே கொடுத்தால் போதும்.

இந்த சட்டத்தை செனட் ஏற்றுக்கொண்டால், அதிகாரிகள் வந்து வீடுகளில் சோதனை நடத்தி, ஏற்கனவே வாடகைக்கு இருந்தவர்கள் செலுத்திய அதே தொகைதான் புதிதாக வாடகைக்கு வந்திருப்பவர்களிடம் வசூலிக்கப்படுகிறதா என்பதை சரிபார்த்துக் கொள்வார்கள்.

அதேபோல் வீட்டு உரிமையாளர்கள் வீடுகளில் மாற்றங்கள் ஏதாவது செய்தால், அதை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்யும்போது, வீட்டு வாடகை உயர்த்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் உயர்த்தலாம், ஆனால் சதுர மீற்றருக்கு 50 செண்ட்கள்தான் உயர்த்தலாம்.

சட்டத்திற்கு இணங்க மறுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு 500,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...