Main Menu

சுவிட்சர்லாந்து கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் பட்சத்தில் முதலாவது அமெரிக்காவுக்குத் தான் கொடுக்கப்படும்

சுவிட்சர்லாந்து கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் பட்சத்தில் முதலாவது அது அமெரிக்காவுக்குத்தான் கொடுக்கப்படும் என தெரியவந்துள்ளது.

அமெரிக்க பார்மா நிறுவனமான Moderna, சுவிஸ் நிறுவனமான Lonzaவுடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.

அதன்படி கொரோனாவுக்கு தடுப்பூசி ஒன்று உருவாக்கப்படுமானால், முதலில் அது அமெரிக்காவுக்குத்தான் கொடுக்கப்படும்.

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு ஜூலையில் தொடங்க உள்ளது. இருந்தாலும், அது எந்த அளவுக்கு பயனளிக்கக்கூடியதாக இருக்கும் என்பது இதுவரை தெரியவரவில்லை.

ஆனால், ஆண்டொன்றிற்கு ஒரு லட்சம் பேருக்கான தடுப்பூசியை தன்னால் தயாரிக்கமுடியும் என சுவிஸ் நிறுவனமான Lonza தெரிவித்துள்ளது.

பகிரவும்...