Main Menu

சுவிட்சர்லாந்தில் நடைபெற இருக்கும் உலக பொருளாதார மாநாட்டை பிரித்தானியா புறக்கணிக்க இருப்பதாக தகவல்

சுவிட்சர்லாந்தில் நடைபெற இருக்கும் உலக பொருளாதார மாநாட்டை பிரித்தானியா புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக பொருளாதார மாநாடு அடுத்த மாதம் சுவிட்சர்லாந்தின் Davosஇல் நடைபெற உள்ள நிலையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள தனது அமைச்சர்களுக்கு தடை விதித்துள்ளார்.

சமீபத்தில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி பிரித்தானிய தேர்தலில் பெரும் வெற்றிபெற்ற நிலையில், தான் ’மக்களின் அரசாங்கத்தை’ நடத்தப்போவதாக அறிவித்திருந்தார் அவர்.

எனவே மக்கள் அரசு என்று பெயர் வைத்துவிட்டு, தனது அமைச்சர்கள் சென்று கோடீஸ்வரர்களுடன் மதுபானம் அருந்திக்கொண்டிருந்தால், அது மக்கள் அரசு என்பதற்கு எதிர்மாறாக இருக்கும் என்று அவர் கருதுவதால், மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...