Main Menu

பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கைது!

பிரித்தானியா Somerset பெட்ரோல் நிலையத்தில் சட்டவிரோதமாக பணி புரிந்த இலங்கையர் உட்பட இரண்டு ஊழியர்கள் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Glastonbury உள்ள Wirral Park வீதியில் உள்ள Esso கராஜ் நேற்று காலை காலை 10.45 மணியளவில் குடிவரவு அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

சுற்றி வளைப்பின் போது பெட்ரோல் நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் வளாகத்திற்குள் நுழைவதையோ அல்லது வெளியேறவோ முடியாத வகையில் தடை செய்யப்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கராஜில் பணி செய்த இலங்கையர் மற்றும் இந்திய நாட்டவர் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு பெட்ரோல் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.

ஊழியர்கள் சட்டப்பூர்வமாக வேலை செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க முடியாவிட்டால், உரிய நிர்வாகம் சட்ட விரோத ஊழியர்களுக்காக 20,000 பவுண்டுகள் செலுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்படும்.

கைது செய்யப்பட்ட இரண்டு சட்டவிரோத ஊழியர்களில் ஒருவர் இலங்கையர் எனவும் அவர் 34 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இலங்கையர் தனது விசா காலம் முடிவடைந்த நிலையிலும் அங்கு பணியாற்றியமை தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மற்ற நபர் 38 வயதுடைய இந்தியர் எனவும் அவர் பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக சென்றவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த இருவரையம் நாடுகடத்தலுக்கு முகங்கொடுத்துள்ள நபர்களை தடுத்து வைத்துள்ள முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பகிரவும்...