Main Menu

சுவிட்சர்லாந்தின் பிரபல கால்பந்து வீராங்கனை ஏரிக்குள் குதித்தபோது மாயம்!

சுவிட்சர்லாந்துக்காக 33 முறை விளையாடிய பிரபல கால்பந்தாட்ட வீராங்கனை ஒருவர் இத்தாலியில் ஒரு ஏரிக்குள் குதித்தபோது மாயமானார்.

அல்பேனிய பின்னணி கொண்டவரான Florijana Ismaili, 2011 முதல் சுவிட்சர்லாந்துக்காக விளையாடி வந்தவராவார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, சுவிஸ் எல்லையிலிருந்து சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இத்தாலிய நகரமான Mussoவிலுள்ள Como ஏரியில், வாடகை படகொன்றில் Ismailiயும் அவரது நண்பரும் பயணித்துள்ளனர்.

அப்போது கரையிலிருந்து 100 மீற்றர் தொலைவில் பயணிக்கும்போது Ismaili ஏரியில் குதித்துள்ளார்.

வெகு நேரமாகியும் அவர் தண்ணீர் மட்டத்திற்கு மேலே வராமல் போகவே, அவரது நண்பர் உதவி கோரி குரல் எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து தீவிரமாக தேடியும் Ismailiயின் உடல் கிடைக்கவில்லை.

பின்னர் ரோபோ ஒன்றின் உதவியுடன் தண்ணீருக்குள் தேடும்போது, மூன்று நாட்களுக்குபின், செவ்வாயன்று, ஏரியின் அடியில் 669 அடி ஆழத்தில் Ismailiயின் உடல் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Ismailiயின் மறைவு சுவிட்சர்லாந்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் அவருக்கு தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.

பகிரவும்...