Main Menu

குடியுரிமை பெற்றுக் கொண்ட 52 ’புதிய கனேடியர்கள்’ தங்கள் வலது கையை உயர்த்தி குடியுரிமை உறுதிமொழி

பல்வேறு நாடுகளில் இருந்து கனடாவுக்கு சென்று கனேடிய குடியுரிமை பெற்றுக்கொண்ட மக்கள் பலர், கனடா தினத்தையொட்டி கண்ணீர் மல்க குடியுரிமை உறுதிமொழி எடுத்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்று கனடா முழுவதும் கனடா தினம் விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து கனடாவுக்கு சென்று குடியுரிமை பெற்றுக் கொண்ட 52 ’புதிய கனேடியர்கள்’ தங்கள் வலது கையை உயர்த்தி குடியுரிமை உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது பலர் கண்களில் தங்களையும் அறியாமல் கண்ணீர் வழிந்ததைக் காண முடிந்தது.

கால்கரி விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட Bivya George, அது வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணம் என்கிறார்.

இந்தியாவிலிருந்து 2015இல் கனடாவுக்கு வந்த Bivyaவின் கணவர் கனடா வந்து 9 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த ஆண்டுதான் தனது கனேடிய குடியுரிமையை பெற்றுக் கொண்டார்.

தானும் இப்போது கனடா குடிமகள் என்பதால், கனடாவை சொந்த நாடு என அழைக்க முடிந்ததில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி.

நானும் ஒரு கனேடிய குடிமகள் என அழைக்கப்படும் அந்த விசேஷ தருணத்திற்காக காத்திருந்தேன் என்கிறார் Bivya.

அதேபோல் உருகுவேயிலிருந்து வந்துள்ள Andrea Leites மற்றும் Diego Fernandez, அவர்களது பிள்ளைகளான Diego மற்றும் Camila ஆகியோர் 10 ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்த நிலையில் தற்போதுதான் அவர்களுக்கு கனடா குடியுரிமை கிடைத்துள்ளது. எனது இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது என்கிறார் Camila.

Priyanka Madanஐப் பொருத்தவரையில், அவர் ஐந்தாண்டுகளாக கனடாவில் வசித்து வருகிறார்.

இங்கு எல்லோரும் எங்களை சொந்த குடும்பம் போல உணர வைக்கிறார்கள் என்கிறார் அவர்.

பகிரவும்...