Main Menu

25 ஆண்டுகளாக வேலையே செய்யாத 30 அரசு ஊழியர்களுக்கு அரசு ஊதியம் வழங்கியுள்ளமை கண்டுபிடிப்பு!

25 ஆண்டுகளாக, ஒரு வேலையும் செய்யாமல், 30 அரசு ஊழியர்கள் ஊதியம் பெற்று வந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, வரி செலுத்தும் பொதுமக்களை கோபமடையச் செய்துள்ளது.

பிரான்சின் Toulon நகரில், 25 ஆண்டுகளாக வேலையே செய்யாத 30 அரசு ஊழியர்களுக்கு அரசு ஊதியம் அளித்து வந்த செய்தி வெளியாகி கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Toulon நகரில் குடிநீர் சேவைப்பிரிவு தனியார் மயமாக்கப்பட்டதையடுத்து, வேலையே இல்லாமல் இருந்த அரசு ஊழியர்களுக்கு, 1.6 மில்லியன் டொலர்கள் ஆண்டொன்றிற்கு ஊதியமாக அளிக்கப்பட்டு வந்துள்ள செய்தி அறிந்து வரி செலுத்துவோர் கடுங்கோபம் அடைந்துள்ளனர்.

அந்த அரசு ஊழியர்களுக்கு மாற்றுப்பணி ஏற்பாடு செய்யத் தவறிய அரசு, அவர்களுக்கு ஊதியத்தை மட்டும் தவறாமல் வழங்கி வந்துள்ளது.

அந்த அரசு ஊழியர்களில் ஒருவர், அரசு ஊதியம் வாங்கிக் கொண்டே, தனியார் துறையில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

மற்றவர்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களில் சிலருக்கு அதிகபட்ச ஓய்வூதியமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இரண்டு மாதங்களுக்கு முன் வெளியான அரசு அறிக்கை ஒன்றில், 300,000 அரசு ஊழியர்கள், வாரத்திற்கு குறைந்த பட்ச வேலை நேரமான 35 மணி நேரம் கூட வேலை செய்வதில்லை என்ற உண்மை தெரியவந்துள்ளது.

பகிரவும்...