Main Menu

ஒஸ்திரியாவில், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்துமாறு பரிந்துரை

ஒஸ்திரியாவில், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்துமாறு அந்த நாட்டு ஜனாதிபதியிடம் பிரதமர் செபஸ்டியன் குர்ஸ் (Sebastian Kurz) பரிந்துரை செய்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டில் அந்த நாட்டு துணைப்பிரதமர் பதவி விலகினார்.

இந்தநிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

துணைப்பிரதமர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி அரசாங்க ஒப்பந்தங்களை வழங்குவதற்காக ரஷ்ய முதலீட்டாளர் ஒருவரிடம் உரையாடிய காணொளி ஒன்று வெளியிடப்பட்ட நிலையில் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...