Main Menu

ரிசாட் பதியுதீன் பதவி விலக வேண்டும் – இல்லாவிட்டால் அவருக்கு எதிராக வாக்களிப்பேன்….!

அமைச்சர் ரிசாட் பதியுதீன் தனக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்பதாக அமைச்சு பதவியினை இராஜினாமா செய்யாவிட்டால் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனும் குறித்த பிரேரரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில், ஆளும் கட்சி நாளை இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை மதியம் இடம்பெறவுள்ள கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில், ஆராய்ந்தேதீர்மானம் மேற்கொள்ளப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனை எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...