Main Menu

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – ஜோ பைடன் அமோக வெற்றி!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஜோ பைடன் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3-ம் திகதி இடம்பெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் போட்டியிட்டார்.

தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. அமெரிக்க தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270 தேர்தல் சபை வாக்குகளை பெறும் வேட்பாளர் ஜனாதிபதி ஆக முடியும்.

இதற்கிடையில்,தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த சில நாட்களாக எண்ணப்பட்டு வந்தன. ஆரம்பம் முதலே ஜோ பைடன் முன்னிலையில் இருந்தார்.

இந்நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் பென்சில்வேனியா மாநிலத்தின் வாக்குகள் எண்ணிக்கை தற்போது நிறைவு பெற்றது. இந்த மாநிலத்திலும் உள்ள 20 இடங்களையும் ஜோ பைடன் கைப்பற்றினார்.

இதையடுத்து, பெரும்பான்மைக்கு 270 தேர்தல் சபை வாக்குகள் தேவையாக உள்ள நிலையில், ஜோ பைடன் 284 தேர்தல் சபை வாக்குகளை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் தேர்வாகியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக பைடன் விரைவில் பதவியேற்க உள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி டிரம்பிற்கு 214 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...