Main Menu

பரம்பரையில் 138 ஆண்டுகளில் முதன் முறையாக பெண் குழந்தை: அமெரிக்க தம்பதியின் நெகிழ்ச்சி

அமெரிக்காவின் மிக்சிகன் பகுதியை சேர்ந்த கரோலின்-ஆன்ட்ரு கிளார்க் தம்பதிக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதிக்கு 4 வயதில் கேமரூன் என்ற ஒரு மகன் உள்ளான். தற்போது 2-வதாக பிறந்த பெண் குழந்தைக்கு ஆட்ரி என்று பெயரிட்டுள்ளனர். இதில் விசேஷம் என்னவென்றால் ஆன்ட்ருவின் பரம்பரையில் கடந்த 1885-ம் ஆண்டில் இருந்து இதுவரை பெண் குழந்தைகள் பிறக்கவில்லை. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கரோலின் இதை அறிந்த போது மிகவும் அவருக்கு ஆச்சரியமாக இருந்துள்ளது. இதனால் தனக்கு பெண் குழந்தை வேண்டும் என கரோலின் ஆசைப்பட்டார். ஆனால் 2 முறை அவர் கருச்சிதைவை சந்தித்தார். ஆனாலும் தம்பதியினர் நம்பிக்கை இழக்காமல் ஆரோக்கியமான கர்ப்பம் மற்றும் குழந்தைக்காக பிரார்த்தனை செய்தனர். இந்த நிலையில் தான் மகள் பிறந்த சந்தோசத்தை வெளிப்படுத்தும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. தனது பரம்பரையில் 138 ஆண்டுகளாக பெண் குழந்தை இல்லாத ஏக்கத்தை போக்கியதாக மகிழ்ச்சியுடன் கூறும் கரோலின் தனது மகளின் வருகை தாங்கள் எதிர்கொண்ட அனைத்து போராட்டங்களுக்கும் அவர் தகுதியானவர் என்று நிரூபித்துள்ளது என கூறினார்.

பகிரவும்...