Main Menu

இஸ்ரேல் சர்வதேச சமூகத்தின் ஆதரவை இழந்து வருகின்றது – டிரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேல் சர்வதேசசமூகத்தின் ஆதரவை இழந்துகொண்டிருக்கின்றது என தெரிவித்துள்ள முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காசா யுத்தத்தை இஸ்ரேல் விரைவில் முடிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலின் பின்னர் இஸ்ரேல் செயற்பட்ட விதத்திலேயே நானும் செயற்பட்டிருப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் ஹயோமிற்கு வழங்கிய பேட்டியில் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்

நீங்கள் யுத்தத்தை விரைவில் முடிக்கவேண்டும் உலகின் ஆதரவை இழந்துவருவதால் இஸ்ரேல் மிகவும் அவதானமாகயிருக்கவேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் தன்னை இஸ்ரேலிய ஆதரவாளர் என தெரிவித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

பகிரவும்...