Main Menu

அப்பாவி மக்களை ரஷ்யா, சிரியா, ஈரான் நாடுகள் படுகொலை செய்வதாக டிரம்ப் குற்றச்சாட்டு

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வாழும் அப்பாவி மக்களை ரஷ்யா, சிரியா, ஈரான் நாடுகள் படுகொலை (carnage) செய்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு சண்டையில், அந்நாட்டு அரசு படைக்கு ரஷ்யா, ஈரான் நாடுகள் உதவி செய்து வருகின்றன. இதனால் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐஎஸ் பயங்கரவாதிகள் வசமிருந்து பல பகுதிகளை சிரிய அரசு படை மீட்டது.

தற்போது கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் இட்லிப் மாகாணத்தை மீட்க சிரிய அரசு படை தாக்குதல் தொடுத்துள்ளது.

இந்நிலையில் ட்விட்டரில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், இட்லிப்பில் நடைபெற்று வரும் படுகொலையை தடுக்க துருக்கி தீவிரமாக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

பகிரவும்...