Main Menu

ஆஸ்திரேலியாவில் பற்றியெரியும் புதர்த் தீயால் குடிநீர் வினியோக உள் கட்டமைப்புகள் சேதம் அடையும் அபாயம்

ஆஸ்திரேலியாவில் பற்றியெரியும் புதர்த் தீயால் சிட்னியின் குடிநீர் வினியோக கட்டமைப்புகள் சேதம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நியூசவுத்வேல்ஸ் உள்ளிட்ட 3 மாகாணங்களில் புதர்த் தீயால் ஏராளமான வீடுகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் எரிந்து நாசமாகின.  இந்நிலையில் சிட்னியின் முக்கிய குடிநீர் ஆதாரமான புராகொராங் ஏரி மற்றும் வரகம்பா அணை சுற்றுவட்டாரங்களில் தீ பரவி எரிந்து வருகிறது.

இந்த ஏரி மற்றும் அணை மூலமாகத் தான் சிட்னி நகருக்குத் தேவையான 80 சதவீத குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ஏரி, அணை, நீரேற்று நிலையம், குழாய் அமைப்புகள் உள்ளிட்டவை நெருப்பால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றைக் காக்க தீயணைப்பு வீரகள் போராடி வருகின்றனர். 

பகிரவும்...