வாடகை மகிழுந்து சாரதிகள் ‘நத்தை’ ஆர்பாட்டம்
இன்று திங்கட்கிழமை காலை முதல், வாடகை மகிழுந்து சாரதிகள் ‘நத்தை’ ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாடகை மகிழுந்து சாரதிகள், நோயாளர் காவு வண்டி, பாடசாலை வாகன சாரதிகள் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘நத்தை’ ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் ஈடுபட்டனர். வீதிகளை வாகனங்களுடன் முற்றுகையிட்ட சாரதிகள், மிக மெதுவாக வாகனங்களை செலுத்தி, போக்குவரத்து தடையை ஏற்படுத்தினர்.
சற்று முன்னர் கிடைத்த தகவலகளின் படி, (காலை 8:46 மணிக்கு) 410 கிலோ மீற்றர்களுக்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Roissy, Orly, La Defense, Torcy, Clignancourt, Bagnolet, Porte d Italy மற்றும் Porte d’Auteuil ஆகிய பகுதிகளில் போ
க்குவரத்து கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. A4, A86 ஆகிய நெடுஞ்சாலைகள் முற்றாக தடைப்பட்டுள்ளன. விமான நிலையத்துக்குச் செல்ல பலத்த சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.