Main Menu

உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதலுக்கு ஒரு மாதம் நிறைவு

நாடு பூராகவும் நிலவும் அமைதியான சூழ்நிலை காரணமாக நாட்டின் இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்பியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்ஷகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்  தற்போது நாடு முழுவதும் அமைதியான சூழ்நிலை நிலவுவதை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது. மக்கள் வாழ்க்கையில் இயல்புநிலை திரும்பியுள்ளது.

எவ்வாறேனும், இலங்கை பொலிஸ் அமைப்பு தனது தேடுதல்களையும், விசாரணைகளையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்றும் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளுக்கு முப்படைகளினதும், சிவில் பாதுகாப்பு படையணியினதும் உச்ச ஒத்துழைப்பு கிடைப்பதையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதே வேளை உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு இன்றைய தினம் 21ஆம் திகதியுடன் ஒரு மாதம் நிறைவடைகின்றது.  கொழும்பில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் மூன்று தேவாலயங்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டிருப்பதாக பின்னர் உறுதி செய்யப்பட்டது .

இந்த துர்ப்பாக்கிய தாக்குதலினால் 253 மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 485பேர் காயங்களுக்குள்ளானதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது, இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் கடந்த காலத்தில் நாடு முழுவதும் விஷேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டிருந்தன.

இந்த நடவடிக்கையில் பயங்கராவத சம்பவத்துடன் தொடர்புபட்ட 89 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 69 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினாலும் 20 பேர் பயங்கரவாத விசாரணை பிரிவினால் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.

பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முப்படையினர் மற்றும் பொலிஸாரும் ஒன்றிணைந்து நாடு முழுவதும் விஷேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு ஒரு மாதம் நிறைவடையும் வேளையில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களை மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதற்காக முப்படையினர் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். தற்பொழுது நாட்டு மக்கள் நாளாந்த நடவடிக்கைகளை வழமை போல் மேற்கொண்டு வருகின்றனர் வெசாக் நோன்மதி தினத்தன்று பொது மக்கள் அச்சம் இன்றி தனது மத வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்ட்;ட குடும்பங்பங்களுக்காக சம்பந்தப்ட்ட பிரதேசத்தில் தேவாலயங்களை கேந்திரமாக கொண்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

உயிரிழந்த நபர்களின் ஆத்ம சாந்திக்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விஷேட தேவ ஆராதனை இடம்பெற இருப்பதாhக வெகுஜன ஊடகம் தொடர்பான கொழும்பு பணிப்பாளர் வணக்கத்திற்குரிய திலகரத்ண ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தினால் பின்னடைவு கண்டுள்ள சுற்றுலாத் துறை உள்ளிட்ட பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

பகிரவும்...