மார்செயில் வாள் வெட்டு தாக்குதல்! – இருவர் படுகாயம்! – சந்தேக நபர்கள் கைது!
மார்செயில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை இரவு, மார்செயின் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Saint-Louis பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆயுததாரிகள் இருவர், இரவு 10.30 மணி அளவில் rue de Lyon வீதியில் வைத்து இருவரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். இதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மறைத்து வைத்திருந்த வாள் ஒன்றை எடுத்து சரமாரியா தாக்கியதாகவும், இதில் இருவருக்கும் பல வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பண கொடுக்கல் வாங்கல் விவகாரத்தினால் இந்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விசாரணைகளை மார்செ நகர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.