பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குகின்றது சுவிஸ்லாந்து!
சுவிஸ்லாந்தில் பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ரயில்கள், டிராம்கள், பேருந்துகள், மலை ரயில்வே மற்றும் படகுகளில் பயணிப்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
கடந்த மாதம் வைரஸ் தொற்றுகள் குறைந்துபோனபோது, அரசாங்கம் முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
தற்போது, தொற்றுநோய்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுவிஸ்லாந்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 32,315 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1,965பேர் உயிரிழந்துள்ளனர்.
பகிரவும்...