Main Menu

செர்பிய நாட்டினருக்கான தனது எல்லையை ஜூலை 15ஆம் வரை மூடுவதாக கிரேக்கம் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் காரணமாக கிரேக்கம், செர்பிய நாட்டினருக்கான தனது எல்லையை ஜூலை 15ஆம் வரை மூடுவதாக அறிவித்துள்ளது.

செர்பியா, தலைநகர் பெல்கிரேடில் வெள்ளிக்கிழமை அவசரகால நிலையை அறிவித்தது. ஏனெனில் ஏப்ரல் மாதம் முதல் அங்கு கொரோனா வைரஸ் தொற்றுவீதம் அதிகமாகியுள்ளது.

தொற்றுநோயியல் தரவுகளை ஆராய்ந்த பின்னர், கிரேக்கம் இந்த முடிவை எடுத்ததாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் அரிஸ்டோடெலியா பெலோனி தெரிவித்துள்ளார்.

செர்பியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதோடு, 300இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...