பெருவின் முன்னாள் ஜனாதிபதி கைது!

பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலெஜன்ட்ரோ டொலிடோ அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரு அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குற்றவாளிகளை மீள ஒப்படைக்குமாறு பெரு அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் கேட்டுக் கொண்டதற்கமைய பெருவின் முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது பதவிக்காலத்தில் 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைக் இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டதாக பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலெஜன்ட்ரோ டொலிடோ எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும், குறித்த குற்றச்சாட்டுக்களை பெருவின் முன்னாள் ஜனாதிபதி முற்றாக மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.