Main Menu

சுவிஸ் மலையேறி புதிய சாதனை!

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மலையேறும் வீரரான டெனி அர்னால்ட் புதிய சாதனை ஒன்றினைப் படைத்துள்ளார்.

550 மீட்டர் உயரம் கொண்ட கரடு முரடான மலையை நாற்பத்தி ஆறே நிமிடங்களில் ஏறியே அவர் இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

புகழ்பெற்ற இத்தாலிய ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியில் கயிறு உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு உபகரணங்களின் உதவியும் இல்லாமல் அவர் ஏறியுள்ளார்.

இதன்மூலம் ஐரோப்பிய வடக்கு மலைப்பகுதிகளில் நான்கு தடவைகள் தனியாக ஏறி சாதனை படைத்தவர் என்ற பெருமையையும் டெனி அர்னால்ட் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.