Main Menu

சஜித் பிரேமதாச பொதுஜன பெரமுனவிற்கு சவாலானவர் இல்லை – மகிந்த

ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சஜித் பிரேமதாச பொதுஜனபெரமுனவிற்கு சவாலானவர் இல்லை என  எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவின் நியமனம் எவ்வாறான சவாலாக அமையும் என்ற கேள்விக்கு எந்த சவாலும் இல்லை இது நாங்கள் எதிர்பார்த்தது தான் என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச சஜித்பிரேமதாச போட்டியிடவேண்டும் என்பதே எப்போதும் எனது கருத்து எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால் சஜித்தால் வெல்ல முடியாதா என கேள்வி எழுப்பிய ஊடகவியலாளரிடம் உங்களிற்கு என்ன பைத்தியமா  தனது திஸ்ஸமகரா அம்பாந்தோட்டை தொகுதிகளிலேயே வெல்ல முடியாத ஒருவரால் எப்படி முழு நாட்டிலும் வெல்ல முடியும் என மகிந்த ராஜபக்ச பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை ஐக்கியதேசிய கட்சி தனது யானை சின்னத்தையே சஜித் பிரேமதாசவிற்கு வழங்கவில்லை,சரத்பொன்சேகாவிற்கும் மைத்திரிபால சிறிசேனவிற்கும் வழங்கிய அன்னத்தையே வழங்கியுள்ளது எனசுட்டிக்காட்டியுள்ள மகிந்த ராஜபக்ச அவர்கள் இருவரும் ஐக்கியதேசிய கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை ஆனால் சஜித் பிரேமதாச ஐக்கியதேசிய கட்சியின் பிரதிதலைவர் என தெரிவித்துள்ளார்.

அவரிற்கு யானை சின்னத்தை வழங்கியிருக்கவேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியானால் நீங்கள் பிரதமரா பதவியேற்பீர்களா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பார்ப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...