பிரித்தானியா
கொரோனா வைரஸ் பரவலால் மகாராணியின் பிறந்தநாள் கொண்டாட்டம் தடை
பிரித்தானியாவின் முடிக்குரிய மகாராணி தனது பிறந்தநாளுக்கு வழங்கப்படும் துப்பாக்கி வேட்டு மரியாதையினை இவ்வருடம் நிகழ்த்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி பிரித்தானியாவின் முடிக்குரிய மகாராணியின் 94ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு வருடமும் மகாராணி எலிசபெத்தின்மேலும் படிக்க...
NHSற்கு “எனது உயிரால் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்” பிரிட்டன் பிரதமர்
தேசிய சுகாதார சேவைகளுக்கு (NHS) தனது உயிரால் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக பிரிட்டனின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். தனக்கு ஏற்பட்ட கொரொனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளித்தமைக்காக, தேசிய சுகாதார சேவைகளுக்குத் தனது உயிரால் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதாக பொரிஸ்மேலும் படிக்க...
பிரிட்டனில் பசித்திருப்போரின் நெருக்கடி அதிகரிப்பு: 1.5 மில்லியன் மக்களுக்கு நாள் முழுவதும் உணவு இல்லாத நிலை
பிரிட்டனில் பசி நெருக்கடி துரிதமாக அதிகரித்து வருவதுடன் 1.5 மில்லியன் மக்கள் நாள்முழுதும் உணவு இல்லாத நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என என உணவுத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்கள் எச்சரித்துள்ளன. பிரிட்டன் முடக்கப்பட்டு 3 கிழமைகளேயான நிலையில், உண்ணுவதற்குமேலும் படிக்க...
கொரோனா – இத்தாலி– ஸ்பெயினை தாண்டி உச்சம் தொட்ட பிரிட்டன்– ஒரு நாளில் 953 மரணங்கள்
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 953 அதிகரித்து 8,931 ஆக உயர்ந்துள்ளது. இது மற்றொரு கடுமையான நாள் எனவும் இதுவே மிகப்பெரிய உயர்வு எனவும் சுட்டிக்காட்டப்பட்டள்ளது. இங்கிலாந்தில் 866 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன, ஸ்காட்லாந்து,மேலும் படிக்க...
கொரோனா – பிரிட்டனில் 24 மணித்தியாலத்தில் அதிக பட்சமாக 936 மரணங்கள் பதிவாகின.
பிரிட்டனில் கொரோனா வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்த மேலும் 936 பேர் மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரிட்டனின் கடுமையான மொத்த எண்ணிக்கையாக 7 ஆயிரத்திற்கு அதிகமான மரணங்கள் பதிவாகி உள்ளன. இங்கிலாந்து மருத்துவமனைகளில் 22 முதல் 103 வயது வரையிலான 828மேலும் படிக்க...
இங்கிலாந்து பிரதமர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம்
கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பிரதமர், வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைவாக, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை லண்டனில்மேலும் படிக்க...
‘நாம் மீண்டும் சந்திப்போம்’ – 68 ஆண்டுகளில் ஐந்தாவது உரை நிகழ்த்தினார் எலிசபெத் மகாராணி!
நாட்டு மக்கள் அனைவரும் உறுதியுடன் எதிர்கொண்டால் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மேலெழுந்து வர முடியும் என பிரித்தானிய மகாராணி எலிசபெத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவது பாரிய பாதிப்பினை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலினால் பிரித்தானியா பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தாக்கம்: 6 மாதங்களுக்கு முடக்க தயராகும் பிரிட்டன்
கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக பரவிவரும் நிலையில் பிரித்தானியாவை 06 மாதங்கள் முடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் பிரித்தானியாவையும் விட்டுவைக்கவில்லை அங்கு இதுவரை 41 ஆயிரத்திற்கும்மேலும் படிக்க...
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் சார்ள்ஸ்!
இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அவர் தற்போது குணமடைந்துள்ளதாக இங்கிலாந்து அரச குடும்பம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகமேலும் படிக்க...
இங்கிலாந்தின் இறப்பு எண்ணிக்கை 1,829 ஆக அதிகரிப்பு!
கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி 25,150 ஆக அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை 1,829 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாகவும் இது 27% அதிகரிப்பு என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸினால்மேலும் படிக்க...
உலகப் போர்களையும் ஸ்பானிஷ் புளூவையும் கடந்து வாழ்ந்த பெண்மணி கொரோனாவால் மரணம்!
உலகிலேயே அதிக வயதுகொண்ட கொரோனா நோயாளி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் சால்போர்ட் (Salford) நகரத்தைச் சேரந்த 108 வயதான ஹில்டா சேர்ச்சில் (Hilda Churchill) என்ற பெண்மணி, கொரோனா தாக்கி உயிரிழந்ததாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் 5மேலும் படிக்க...
பிரிட்டனில் மோப்ப நாய்களைக் கொண்டு கிருமித்தொற்றை அடையாளம் காணும் முயற்சி
நாய்கள் மோப்பத் திறனுக்குப் பெயர்பெற்றவை. காவல்துறை, சுங்கத்துறை எனப் பல துறைகளின் அதிகாரிகளுக்குக் குற்றங்களைக் கண்டறியும் பணியில் அந்தத் திறன் பெரிதும் பயன்படுவது நாம் அறிந்ததே. இப்போது அதனைப் பயன்படுத்தி, COVID-19 கிருமித்தொற்றைக் கண்டறிய முயற்சி செய்கிறது, பிரிட்டனில் செயல்படும் அறநிறுவம்மேலும் படிக்க...
இங்கிலாந்து பிரதமர் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது!
கடந்த 24 மணி நேரமாக எனக்கு கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் காணப்பட்டன. இப்போது நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு கொரோனாமேலும் படிக்க...
நலன்புரிக் கொடுப்பனவுக்கு 5 லட்சம் பேர் விண்ணப்பம்
கொரோனா வைரஸ் நெருக்கடியினால் வேலைவாய்ப்பை இழந்தவர்கள், நலன்புரிக் கொடுப்பனவுக்காக (Universal Credit) விண்ணப்பிக்க எடுக்கும் முயற்சி கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக உள்ளது என பலரும் கூறுகின்றனர். கடந்த ஒன்பது நாட்களில் 500,000 க்கும் அதிகமானோர் நலன்புரிக் கொடுப்பனவுக்கு விண்ணப்பித்துள்ளதாக வேலை மற்றும் ஓய்வூதியத்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : 10 இடங்களில் தற்காலிக மருத்துவமனைகள்
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க லண்டனின் எக்ஸெல் மண்டபம் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகின்றது. அங்கு 4000 படுக்கைவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நோயாளர்கள் தங்கவைக்கப்படவுள்ளனர். கிழக்கு லண்டனில் உள்ள எக்ஸெல் மண்டபம் அடுத்த வாரம் முதல் நைட்ரிங்கேல் மருத்துவமனை எனப் பெயரிடப்பட்டுமேலும் படிக்க...
பிரித்தானியாவில் மேற் கொள்ளப்படும் புதிய நடவடிக்கைள்
கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பிரித்தானியா முடக்கப்பட்டுள்ளநிலையில் பல புதிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த சில நாட்களில் லண்டனின் எக்ஸெல் மண்டபம் 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட உள்ளது. ஏனைய பெரிய கட்டிடங்கள் மற்றும் அரங்குகளை தற்காலிக மருத்துவமனையாக மாற்றுவதற்குமேலும் படிக்க...
கொரோனா; ஊழியருடன் எலிசபெத் மகாராணி எந்தளவு தொடர்புகளை மேற் கொண்டிருந்தார்?
இரண்டாம் எலிசபெத் மகாராணி பிரிட்டன், பக்கிங்ஹாம் அரண்மனையில் தங்கியிருந்த காலக் கட்டத்தில் ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக 93 வயதான இரண்டாம் எலிசபெத் மகாராணியும், 98 வயதான அவரது கணவர்மேலும் படிக்க...
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சம் புகுந்த தெலுங்கானா மாணவர்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தெலுங்கானா மாணவர்கள் தஞ்சம் புகுந்தனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக வெளிநாட்டு விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளிநாடுகளில் வசித்து வரும் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்பமேலும் படிக்க...
இங்கிலாந்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரிப்பு!
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மேலும் 53 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, இங்கிலாந்தில் இந்நோய்த் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 233 ஆக உயர்வடைந்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா வைரஸூக்கு எதிராக போராடி வரும் தனிப்படுத்தப்பட்டவர்களுக்கு, அடுத்த 12 வாரங்களுக்கு தேவையானமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- …
- 20
- மேலும் படிக்க
