Main Menu

பிரித்தானியாவில் மேற் கொள்ளப்படும் புதிய நடவடிக்கைள்

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பிரித்தானியா முடக்கப்பட்டுள்ளநிலையில் பல புதிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றன.

அடுத்த சில நாட்களில் லண்டனின் எக்ஸெல் மண்டபம் 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட உள்ளது.

ஏனைய பெரிய கட்டிடங்கள் மற்றும் அரங்குகளை தற்காலிக மருத்துவமனையாக மாற்றுவதற்கு ஆயுதப் படைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

ராணுவம் மருத்துவமனைகளுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கத் தொடங்கியுள்ளது.

COVID-19 நோய்க்கு எதிராகப் போராட உதவும் வகையில் மருத்துவப் பொருட்களுடன் சரக்கு விமானங்கள் தரையிறங்க ஹீத்ரோ விமான நிலையத்தில் முன்னுரிமை அளிப்படவுள்ளது.

அமைச்சரவை அமைச்சர்கள் முதன்முறையாக வீடியோ கொன்பரன்சிங்கைப் பயன்படுத்தி ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் அறிகுறிகளைக் கண்டறியும் புதிய பயன்பாட்டை லண்டன் கிங்ஸ் கல்லூரி அறிமுகப்படுத்துகிறது.

ஸ்போர்ட்ஸ் டைரக்ட், தனது கடைகள் திறக்கப்படமாட்டாது என்று உறுதிப்படுத்தியுள்ளது.

கெமிக்கல்ஸ் நிறுவனமான INEOS, 10 நாட்களுக்குள் மிடில்ஸ்பரோவுக்கு அருகில் கை சுத்திகரிப்புத் (hand sanitiser) தொழிற்சாலையை உருவாக்கவுள்ளது.

பிரிட்டனின் Got Talent இறுதிப் போட்டிகள் இந்த ஆண்டின் பிற்பகுதி வரை ஒத்திவைக்கப்படும் என்று ஐரிவி உறுதிப்படுத்தியுள்ளது.

ZSL லண்டன் மிருகக்காட்சிசாலை தனது 18,000 விலங்குகளின் பராமரிப்பிற்காக ஒரு புதிய நிதித் திரட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது.

லண்டனின் ரோயல் பூங்காக்கள் திறந்திருக்கும், ஆனால் பார்வையாளர்கள் சமூக இடைவெளி விதிகளை மதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நன்றி news.sky.com

பகிரவும்...