Main Menu

இங்கிலாந்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மேலும் 53 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, இங்கிலாந்தில் இந்நோய்த் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 233 ஆக உயர்வடைந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸூக்கு எதிராக போராடி வரும் தனிப்படுத்தப்பட்டவர்களுக்கு, அடுத்த 12 வாரங்களுக்கு தேவையான உணவுகளை வழங்க துருப்பினர் தயார்ப்படுத்தல்களை மேற்கொள்கின்றனர்.

தேசிய சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கும், தனியார் வைத்தியசாலைகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த முன்னாயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொரோனா வைரஸிற்கு எதிராக போராட அடுத்த வாரம் ஆயிரக்கணக்காக படுக்கைகளும் தாதியர்களும் தயாராக இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் உறுதிப்படுத்தப்பட்ட மேலும் 53 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, இங்கிலாந்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் இருவர் வேல்ஸிலும், ஒருவர் ஸ்கொAட்லாந்திலும் உயிரிழந்துள்ளார்கள்.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் இங்கிலாந்தில் இந்நோய்த் தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 35 ஆல் அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

லண்டனில் உள்ள பப்கள், உணவகங்கள், திரையரங்குகள் முதலான அனைத்தையும் மூடுமாறு பிரதமர் அறிவித்ததைத் தொடர்ந்து, மக்கள் உணவுப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக நேற்று பல பல்பொருள் அங்காடிகளில் முண்டியடித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தைப் போலவே, ஸ்பெய்ன், பெல்ஜியம், ஜேர்மனியும் கொரோனா பரவலைத் தடுக்கத் திணறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...