Main Menu

உலகப் போர்களையும் ஸ்பானிஷ் புளூவையும் கடந்து வாழ்ந்த பெண்மணி கொரோனாவால் மரணம்!

உலகிலேயே அதிக வயதுகொண்ட கொரோனா நோயாளி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் சால்போர்ட் (Salford) நகரத்தைச் சேரந்த  108 வயதான ஹில்டா சேர்ச்சில் (Hilda Churchill) என்ற பெண்மணி, கொரோனா தாக்கி உயிரிழந்ததாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரும் 5 ஆம் திகதி அவருக்கு 108 ஆவது பிறந்த நாள் வரும் நிலையில் கடந்த செவ்வாய் அன்று அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்ட அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொற்று உறுதியானது. அதற்குப் பின்னர் 24 மணி நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு உலகப் போர்களையும், 1918 இல் வெடித்த ஸ்பானிஷ் புளூவையும் கடந்து உயிர் வாழ்ந்த இந்தப் பெண்மணி கொரோனாவுக்குப் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...