இலங்கை
யாழ்.நகரில் நேற்றிரவு வாள்வெட்டு- இருவர் படுகாயம்!
யாழ்ப்பாண நகரில், கொட்டடி பகுதியில் நேற்றிரவு வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொட்டடி வைரவர் கோவிலடியில் இன்றிரவு 8 மணி அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.மேலும் படிக்க...
வடமராட்சியில் இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் நிலை
யாழ்.வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் நேற்றிரவு மோதல் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து 4 இளைஞர்களை இராணுவம் கைது செய்துள்ளதுடன் அப்பகுதியை இராணுவம் சுற்றிவளைத்துள்ளதால் பதற்றம் நிலவுகின்றதாக அங்கிருந்துகிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்றய தினம் நள்ளிரவுமேலும் படிக்க...
10 மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள்
இலங்கையின் 10 மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கு ஒரே நேரத்தில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிகாரிகளை மாற்றும் படலமும் மிக வேகமாக இடம்பெறும் நிலையில் விரைவில் 10 மாவட்டங்களுற்கு புதிய மாவட்டச்மேலும் படிக்க...
தமிழர்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் சென்றவர்கள் வெறுமனே குரல் கொடுப்பதாக நடிக்கின்றனர்
வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்.பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என கூறுக்கொண்டு திரிகின்றவர்களுக்கு நான் செருப்பால் தான் பதில் சொல்வேன் .மரணத்தை தழுவும் வரை பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தருவதற்காகமேலும் படிக்க...
இலங்கையில் மனித உரிமைகளிற்கு கடும் ஆபத்து – மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை!
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கையில் மனித உரிமைகளிற்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 2019 இல் சர்வதேச மனித உரிமை நிலவரம் குறித்த தனது ஆண்டு அறிக்கையிலேயே சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்மேலும் படிக்க...
13 ஆவது திருத்தம் தொடர்பான கோட்டா, மஹிந்தவின் கருத்துக்கள் தேர்தலை நோக்கியதே – சிவமோகன்!
சர்வதேச ஒத்துழைப்புடன் போரை நிறுத்திவிட்டு, தமிழர்களின் தீர்வுக்கு மட்டும் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியமில்லை என பிரதமர் மஹிந்த கூறுவதானது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில்மேலும் படிக்க...
பொதுத்தேர்தல் – விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியின் சின்னம் வெளியிடப்பட்டது!
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமாக, பொங்கல் பானைச் சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளரான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், தனது பொங்கல் வாழ்த்துடன் விடுத்துள்ளார். உலகம் வாழ் உறவுகளுக்கும் தனது மனமார்ந்தமேலும் படிக்க...
மார்ச் 01 ஆம் திகதி முதல் தோட்டத் தொழிலார்களின் நாளாந்த குறைந்த வேதனம் ஆயிரம் ரூபா
மார்ச் மாதம் 01ஆம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த வேதனம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார். இதனுடன் இணைந்ததாக உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட தோட்டத் துறையின் அனைத்து பகுதிகளையும் துரிதமாகமேலும் படிக்க...
கூட்டமைப்பினரால் விமர்சையாக கொண்டாப்பட்ட தைப்பொங்கல்!
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நிகழ்வு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் விமர்சையாக கொண்டாப்பட்டது. கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை பொங்கல் பொங்கி தைத்திருநாள் நிகழ்வுகள் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கட்சிமேலும் படிக்க...
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் கொண்டாடப் பட்டுள்ளது!
உலக செழிப்பின் காரணகர்த்தாவான சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் பண்டிகையான தைத்திருநாளை இன்றைய தினம் உலகத் தமிழர்கள் கொண்டாடுகின்றனர். தமிழ் மாதங்களில் தை மாதத்தின் முதல் நாள் இன்றாகும். சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாள் இது.மேலும் படிக்க...
19ஆவது திருத்தத்தினை முழுமையாக மாற்றி அமைக்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது – நாலக கொடஹேவா!
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தினை முழுமையாக மாற்றியமைக்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது என வியத்மக அமைப்பின் உறுப்பினர் பேராசிரியர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டமேலும் படிக்க...
நாட்டு மக்களை ஏமாற்றும் வகையிலான செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது – ஐ.தே.க
நாட்டு மக்களை ஏமாற்றும் வகையிலான செயற்பாடுகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்துமேலும் படிக்க...
தமிழ் மக்களுக்கான பிரச்சனைக்கான தீர்வினை இந்தியாவிடம் எதிர்பார்க்க முடியாது – டக்ளஸ் தேவானந்தா
இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையிலான பிரச்சனை குறித்து விரைவில் பேச்சுவார்த்தை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று(செவ்வாய்கிழமை) காலை அலரிமாளிகையில் ஆதவன் செய்திச் சேவை உள்ளிட்ட முக்கிய தமிழ் ஊடகங்களின் பிரதானிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சந்தித்துமேலும் படிக்க...
இஸ்லாம் அடிப்படைவாதம் தொடர்பாக அரசாங்கம் என்ன செய்துள்ளது? – ஞானசார தேரர்
இனவாத செயற்பாடுகளை நாட்டிலிருந்து முழுமையாக இல்லாது செய்ய, அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,மேலும் படிக்க...
ரஞ்சன் ராமநாயக்க கைது!
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் இல்லத்தை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைத்து அவரை கைது செய்துள்ளனர். நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் பிடியாணைமேலும் படிக்க...
கட்சியிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டார் ரஞ்சன்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இன்று (செவ்வாய்க்கிழைமை) இதனை தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க மாதிவெலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்துமேலும் படிக்க...
அரசாங்கத்திற்கும் தமிழர்களுக்கும் இடையிலான இடைவெளிக்கு தமிழ் ஊடகங்களே காரணம் – மஹிந்த!
அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான இடைவெளிக்கு தமிழ் ஊடகங்களே காரணம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சாடியுள்ளார். தமிழ் ஊடகப் பிரதானிகள் உடனான சந்திப்பு இன்று(செவ்வாய்கிழமை) காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
ஜெனீவா விவகாரத்தினை நட்பு நாடுகளுடன் இணைந்து எதிர்கொள்வோம் – அரசாங்கம்!
ஜெனீவா விவகாரத்தினை நட்பு நாடுகளுடன் இணைந்து எதிர்கொள்வோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழ் ஊடகப் பிரதானிகள் உடனான சந்திப்பு இன்று(செவ்வாய்கிழமை) காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,மேலும் படிக்க...
தனியார் உரையாடல்கள் ஊடகங்களில் கசிந்தமை தொழில் நுட்பத்தின் தவறான பயன்பாடு – சபாநாயகர்
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான தனியார் தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள், தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும் புதிய தொழில்நுட்பம் நாட்டிற்கு நல்லது என்றாலும், இதனை தவறாகப் பயன்படுத்துவது சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அவர்மேலும் படிக்க...
ஐ.தே.க.வை விட்டு வெளியேற மாட்டேன் – விஜயகலா

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலேயே போட்டியிடுவேன். வேறு கட்சிக்கு ஒருபோதும் செல்லமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலின்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் வாய்ப்பு வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பெருமளவு பணம் கேட்டதாக இணையத்தளங்களில் வெளியாகியுள்ளமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 350
- 351
- 352
- 353
- 354
- 355
- 356
- …
- 434
- மேலும் படிக்க
