Main Menu

ரஞ்சன் ராமநாயக்க கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் இல்லத்தை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைத்து
அவரை கைது செய்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் அவரைக் கைது செய்வதற்காக அதிகாரிகள் விரைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது

நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிடுவதன்மூலம் அரசியலமைப்பின் பிரிவு 111 சி (2) இன் பிரகாரம் அவர் குற்றவாளி என்பதனால் அவரை கைதுசெய்ய பிடியாணையை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில் நீதவான் பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...